மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் 

21 Apr, 2025 | 11:29 AM
image

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) காலை தேவாலயத்தின் முன்பாக உயிரிழந்தவர்களின் உறவுகளால் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது. 

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. 

குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டனர். 

இதன்போது, உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த நினைவேந்தலின்போது அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விமானப்படையினர்  பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலால் நாட்டின் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்  இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30