கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் 170 பயணிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதோடு 28 பேரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றி சென்றமையாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். படகு கரைக்கு அருகில் வரும் போது  பாரம் தாங்காமல் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த பாதி பேர் மற்ற படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர். 

ஆனால்  படகு மிக வேகமாக மூழ்கியதால் மற்றவர்களை காப்பாற்ற முடியவில்லை என மீட்புபணியினர் தெரிவிக்கின்றனர்.