update ; கெப் வண்டி விபத்து ; முதியவர் பலி ; 9 பேர் படுகாயம்

Published By: Digital Desk 2

21 Apr, 2025 | 12:13 PM
image

நில்தண்டாஹின்ன - தெரிபெஹெ வீதியில் மாஹேன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிபெஹெ பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தெரிபெஹெவிலிருந்து நுவரெலியா நில்தண்டாஹின்ன நோக்கிப் பயணித்த கெப் வண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கெப் வண்டியில் பயணித்த மூன்று ஆண்களும், நான்கு பெண்களும் மூன்று குழந்தைகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அம்பாறை ரஜகலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஆவார்.

உயிரிழந்த முதியவரின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரிபெஹெ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணி உரித்தை நிரூபிப்பதற்கு இலவச சட்ட...

2025-05-21 17:38:31
news-image

மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க...

2025-05-21 17:38:03
news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36