தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதே ; முன்னாள் எம்பி சந்திரகுமார்

21 Apr, 2025 | 10:27 AM
image

இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு  ஆதாவது ஜேவிபிக்கு வாக்களித்தால்  அது தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு நிகராகிவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  

கிளிநொச்சி அம்பாள்குளம்  கிராமத்தில்  ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை  ஆதரித்து இடம்பெற்ற  கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த உள்ளூராட்சி தேர்தல்  மிக முக்கியமான காலக்கட்டத்தில் இடம்பெறுகிறது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து உள்ளுர்  அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைப்பெறவுள்ளது. 

எனவே, உள்ளூர் அதிகாரங்கள் அந்தந்த உள்ளூர் தரப்பினர்களிடமே இருக்க வேண்டும். அதிகார பகிர்வுக்காக போராடிய அதற்காக பல தியாகங்களை செய்த இனம் நாங்கள். 

அந்த தியாகங்களுக்கு ஈடாக தீர்வுகள் இதுவரை கிடைக்காத போதிலும்  கிடைத்த இந்த உள்ளூர் அதிகாரத்தையாவது நாம் தொடர்ந்தும்  எங்களுக்குள் வைத்திருக்க வேண்டும். அதுவே தமிழ் இனத்தின் எதிர்கால அரசியல் உரிமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு பலம் சேர்க்கும்.

ஆகவே, தமிழ் மக்கள்  நாட்டில் ஏற்பட்ட ஒரு பொதுவான  ஒரு அலையில் சிக்குண்டு செல்வார்கள் எனில்  அந்த அலை தமிழ் மக்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். 

இந்த  அலை என்பது இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மிக மோசமாக பாதிக்கும் அலை, இந்த அலைக்குள் சிக்குண்டால் ஒரு போதும் கரை சேர முடியாது போய்விடும்.

எனவே, வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனநாயக  தமிழ்த் தேசியக் கூட்டணியில்   சங்கு சின்னத்தில் மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உள்ள மக்களுக்காக  அர்ப்பணிப்போடு பணியாற்றக் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து வாக்களித்து  வெற்றிப்பெற செய்யுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்;...

2026-05-21 06:42:45
news-image

போலிப் பிணையாளர்கள் வழக்கு: நால்வருக்கு பிணை...

2026-05-21 06:40:19
news-image

வாக்குறுதிகளை தாமதிக்காது நிறைவேற்ற வேண்டும் ;...

2026-05-21 06:28:53
news-image

நில உரிமைகோரி ஆரம்பித்த மலையக சிறுவனின்...

2026-05-21 06:24:59
news-image

முன்கூட்டியே கடன் கடிதங்கள் திறந்து 4,000...

2026-05-20 12:54:35
news-image

இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் அஞ்சலி...

2026-05-20 13:34:04
news-image

பூகோள நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலையேற்றம் தற்காலிகமானதே...

2026-05-20 14:58:51
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை...

2026-05-20 19:34:07
news-image

மாகாண சபை தேர்தலை பழைய முறையில்...

2026-05-20 15:28:02
news-image

தமிழர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளை...

2026-05-20 16:02:58
news-image

ஒப்பந்தகாரர்களுக்கு நிதி வைப்பு விவகாரம் :...

2026-05-20 16:26:41
news-image

போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான சட்டங்கள்...

2026-05-20 22:43:31