கோஹ்லி, படிக்கல் அபார அரைச் சதங்கள் குவிப்பு; பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு

Published By: Vishnu

21 Apr, 2025 | 01:05 AM
image

(நெவில் அன்தனி)

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மல்லன்பூர் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 37ஆவது போட்டியில் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

ஷஷாங் சிங் 31 ஓட்டங்களுடனும் மார்க்கோ ஜென்சன் 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 43 ஓட்டங்களே பஞ்சாப் கிங்ஸ் அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டது.

ஆரம்ப விக்கெட்டில் ப்ரியன்ஷ் ஆரியா (22), ப்ரசிம்ரன் சிங் (33) ஆகியோர் 26 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து கொடுத்திருந்தனர்.

ஜொஷ் இங்லிஸ் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் க்ருணல் பாண்டியா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுயாஷ் ஷர்மா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

158 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருந்தபோது பில் சோல்ட் (1) ஆட்டம் இழந்தார்.

ஆனால், விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

படிக்கல் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து விராத் கோஹ்லி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00
news-image

இத்தாலி டயமண்ட் லீக்கில் ருமேஷ் தரங்க...

2026-06-05 10:17:30
news-image

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி...

2026-06-04 17:50:11
news-image

குவாட்ரங்கிள் கிண்ண வருடாந்த கோல்ஃப் தொடர்...

2026-06-04 20:04:15
news-image

துடுப்பாட்டத்தில் பெத்தும், குசல் அபாரம்; கேர்ஸ்டனின்...

2026-06-04 11:21:38
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள்...

2026-06-03 18:38:05