நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது அநுர அரசு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

Published By: Digital Desk 2

20 Apr, 2025 | 09:12 PM
image

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அநுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என  யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.

தனது கட்சியிடம் அதிகாரம் கிடைக்கும் பட்சத்திலே உள்ளூர் அதிகர சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற தொனிப்பொருளில் வடக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இது ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடியாகும். தேர்தல் ஆணைக் குழுவுக்கு இரண்டாவது கடிதமும் அனுபப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கருத்து ஒரு மக்கள் கூட்டத்தின் ஜனநயகத்தை கேள்விக் குறியாக்குகின்றது.

அதுமட்டுமல்லாது இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதை காட்டுகின்றது. இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை இந்த அரசு செய்ய முயல்கின்றது.

இவர்களது மிரட்டல் அதிகார இலஞ்சத்தை எவரும் ஏற்காது தேசிய மக்கள் சக்திதை தமிழர் தாயக பகுதிகளில் இருந்து மக்கள்  தூக்கி எறிவது அவசியமாகும்.

எமக்கு மத்தியின் எந்த நிதியும் வேண்டாம். எமக்கு கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்றால் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எம்மிடம் எமது மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்கு.

அந்தவகையில் தமிழரையும் தமிழர் இருப்பையும் இல்லாதொழித்த தேசிய மக்கள் சக்தியை தமிழ் அரசியல் பரப்பில் காலூன்ற விடாது அனைவரும் ஒருமித்து எதிர்கொள்வது அவசியம்.

இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்படுகளே தேசிய மக்கள் கட்சியின் வடக்கின் வருகைக்கான வாய்ப்பை வழங்கியது. இதை உணர்ந்து தமிழ் மக்கள் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பது அவசியம் என மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23