(ஆர்.யசி)

சர்வதேச முதலீடுகள் தடுக்கப்படவும் இந்த போராட்டங்களே காரணம். ஆகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைச்சர்கள் செவிசாய்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் நீங்கிவிட்டது. அரசாங்கத்தை எதிர்த்து தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசாங்கத்தையே பாதிக்கும். 

ஆகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைச்சர்கள் செவிசாய்க்க வேண்டும். சர்வதேச முதலீடுகள் தடுக்கப்படவும் இந்த போராட்டங்களே காரணம்.

நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.