சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன் குற்றசாட்டு - தடைகளையும் விதித்தது.

20 Apr, 2025 | 01:15 PM
image

ரஸ்யாவிற்கு சீனா ஆயுதங்களை விநியோகிக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீன அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான்,சீனா யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்கின்றது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர் மாநாட்டில் சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றது,சீன அரசாங்க பிரதிநிதிகள் ரஸ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைனிடம்இது குறித்த தகவல்கள் உள்ளது எதிர்வரும் நாட்களில் அதனை வெளியிடவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்துசீனாவின் மூன்று நிறுவனங்களிற்கு எதிராக தடைகளை அறிவித்துள்ள உக்ரைன் இந்த நிறுவனங்கள் அதிநவீன ஐஎஸ்காண்டர் ஏவுகணைகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேரடிப் பேச்சுவார்த்தைக்கான ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார்...

2026-06-06 12:48:59
news-image

சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5...

2026-06-06 11:46:43
news-image

ஆபிரிக்காவில் பரவும் எபோலாவை கட்டுப்படுத்த 6...

2026-06-06 12:10:58
news-image

உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் !...

2026-06-06 10:24:36
news-image

ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70...

2026-06-05 19:04:45
news-image

மனித உரிமை மீறல்களைத் தடுக்க மைக்ரோசொப்ட்...

2026-06-05 16:24:51
news-image

ஜப்பானில் விசித்திரச் சம்பவம்: நால்வரைத் தாக்கிவிட்டு...

2026-06-05 16:17:46
news-image

வெனிசுவெலா இடைக்கால ஜனாதிபதி டெல்சியின் இந்திய...

2026-06-05 15:06:58
news-image

இந்தோனேசியாவில் லெவோடோபி எரிமலை மீண்டும் வெடிப்பு:...

2026-06-05 15:15:51
news-image

பெருந்தொற்றுகளைத் தடுக்கும் புதிய தடுப்பூசி செயற்கை...

2026-06-05 14:09:22
news-image

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் ;...

2026-06-05 12:46:40
news-image

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” நிறுவனர்...

2026-06-05 11:55:42