(ஆர்.யசி)

மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண சகல முயற்சிகளை எடுத்த போதிலும் ஒருசிலரின் இனவாத செயற்பாடுகள் தீர்வை தடுக்கின்றது. 

மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிக்கின்றன. தமிழ், சிங்கள இனவாத அரசியலை முழுமையாக அழித்தால் மாத்திரமே தீர்வு கிடைக்கும்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிகழ்வு ஒன்று இன்று ஹொரனை பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.