அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி 5 பேர் பலி 

Published By: Digital Desk 3

20 Apr, 2025 | 10:13 AM
image

அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தாக்கிய சக்தி வாய்ந்த அலைகளில் சிக்கி  ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரைகளில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள டாத்ரா அருகே சனிக்கிழமை அன்று  நீரில் மிதந்த ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

58 வயது மீனவர் ஒருவரும் இரண்டு ஆண்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த கிடந்த  ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

சிட்னி அருகே நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமையும், ஒரு குழுவினர் விக்டோரியாவின் சான் ரெமோவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, ஆண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.

அதில், பெண்ணொருவர் கரைக்கு திரும்பிய நிலையில், மற்றுமொரு பெண்ணும் ஆணும் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்கள் ஆபத்தான அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்ஃப் லைஃப் சேவிங் அவுஸ்திரேலியா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆடம் வீர், கடந்த 10 ஆண்டுகளில் 630 பேர் கண்காணிப்பு இல்லாத கடலில் மூழ்கி உயழிரிழந்துள்ளதாக தரவுகளை சுட்டிக்காட்டிய அவர்,  உயிர்காக்கும் சேவையின் உறுப்பினர்கள் இருக்கும் கடற்கரைகளுக்குச் செல்லுமாறு விடுமுறைக்கு வருபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

"ஆனால் இந்த கடலோர இடங்கள் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும், சிலவற்றை நீங்கள் பார்க்க முடியும், சிலவற்றை நீங்கள் பார்க்க முடியாது, அதனால்தான் எங்களிடம் 'நிறுத்து, பார், உயிருடன் இரு' சில எளிய ஆலோசனைகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12