மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

20 Apr, 2025 | 09:58 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

எல்சல்வடோருக்கு அமெரிக்க அரசாங்கம் தவறாக நாடு கடத்திய கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை திருப்பிஅழைக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் அரசாங்கவேலைகளை குறைப்பதற்கான ,ஏனைய நலன்புரி சேவைகளிற்கான நிதியை குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து தமது விரக்தியை ஆர்ப்பாட்டக்காரர்கள்,வெளியிட்டுள்ளனர்.

கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை டிரம்ப் நிர்வாகம் தவறுதலாக எல்சல்வடோரிற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள ஒருவர் அவரை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவருவதற்காக எல்சல்வடோர் மீது டிரம்பினால் அழுத்தங்களை கொடுக்க முடியும் என  தெரிவித்துள்ளார்.

பல ஆர்ப்பாட்டக்காராகள் மன்னர்கள் தேவையில்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் சுலோக அட்டைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த வாசகம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவில் புரட்சி ஆரம்பித்த 250 வருடத்தின் ஆரம்பத்தை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு இது மிகவும் ஆபத்தான தருணம் என தோமஸ்பாஸ்போர்ட் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் தோற்றம் பற்றியும் நாம் சிலவேளை சுதந்திரத்திற்காக போரிடவேண்டியிருக்கும் என்பது குறித்தும் அடுத்த தலைமுறை அறிந்திருக்கவேண்டும் என அவர் பொஸ்டனில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50501 என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, அதாவது 50 ஆர்ப்பாட்டங்கள் 50 மாநிலங்கள் ஒரே நோக்கம் என்பதே இதன் அர்த்தம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59
news-image

ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ;...

2026-09-09 11:14:26
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா...

2026-09-09 11:16:36
news-image

வழமைக்கு திரும்பியுள்ளது ஈபிள் கோபுரம்

2026-09-09 10:55:22
news-image

நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு...

2026-09-09 14:21:18
news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50