இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி கொழும் துறைமுகத்தை வந்தடைந்த இரு பிரான்ஸ் நாட்டின் யுத்தக்கப்பல்கள் இன்று நாடுதிரும்பியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே கடந்த 20 ஆம் திகதி நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்திருந்தன.

குறித்த இரு கப்பல்களும் இலங்கையில் தரித்து நின்ற நாட்களில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பிரான்ஸ் கடற்படை வீரர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன் வெலிசறையில் அமைந்துள்ள கடற்படையின் மைதானத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.