இன்றைய வானிலை

20 Apr, 2025 | 06:05 AM
image

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மாகாணத்திலும்  அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம்  மாவட்டங்களிலும் காலை வேளையில்  மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ  மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ் வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க...

2025-05-21 17:34:37
news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17