திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெய்திலி தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட உத்தியோகஸ்த்தர் ஒருவர் தனக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வீட்டை சொந்தமாக்கி கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த தோட்ட உத்தியோகஸ்த்தர் அத்தோட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது 7 வருடங்களுக்கு மேலாகியுள்ளது.ஆனால் தோட்ட நிர்வாகத்தால் தோட்ட உத்தியோகஸ்த்தருக்கு வழங்கப்பட்ட வீடுகள் திரும்ப பெற வேண்டும் என்பது பெருந்தோட்ட சட்டத்தில் உள்ளது.

இதனை மீறி, வழங்கப்பட்ட வீட்டுக்கு உரிய சட்ட பூர்வமான ஆதாரங்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இவ்வீட்டை ஆக்கிரமித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய தோட்ட உத்தியோகஸ்த்தர்களும் பணியாற்றுகின்ற நிலையில் குறித்த உத்தியோகஸ்த்தர் தனது தற்காலிகமான வீட்டை சொந்தமாக்கி கொள்வது எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை உருவாக்கும் என்பதை காரணங்காட்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.