சத்துக்களின் இருப்பிடம் நெல்லி

19 Apr, 2025 | 04:14 PM
image

பொதுவாக நெல்லிக்காயில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. 

அந்த வகையில் நெல்லிக்காய் ஜூஸூடன் கருப்பு மிளகு தூள் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் இருக்கிறதெனப் பார்ப்போம்.

நச்சுக்களை நீக்கும் - உடலில் சேரும் கனமான உலோகங்களை நெல்லிக்காய் சுத்தம் செய்கிறது. 

வாய் ஆரோக்கியம் - நெல்லிக்காயில் காணப்படும் ஆன்டிபக்டீரியல் பண்புகள் ஈறுகளில் ஏற்படும் தொற்றை நீக்குகிறது. கருப்பு மிளகு பல் வலியைக் கட்டுப்படுத்துவதோடு, வாய்க்கு நறுமணத்தையும் தருகிறது. 

ஒட்சிசனை அதிகரிக்கும் - நெல்லிக்காய் மூளைக்குச் செல்லும் ஒட்சிசனை அதிகரித்து சுறுசுப்பாக இயங்கச் செய்யும். கருப்பு மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

மன அழுத்தத்தை குறைக்கும் - நெல்லிக்காயில் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. இதனால் மனச் சோர்வை நீக்குகிறது. 

கண்கள் ஆரோக்கியம் - நெல்லிக்காயில் விட்டமின் ஏ, கரோடினொய்டுகள் உள்ளதால் கண்கள் வறட்சி, பார்வைக் கோளாறுகளை சரி செய்கிறது.

இரும்புச் சத்து - இதில் காணப்படும் விட்டமின் சி உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை வழங்கி சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை பெற்றுக்கொடுக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right