இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கையணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளே தனது பதவியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்திருந்த நிலையிலேயே அந்தப் பதவிக்கு மஹேல ஜெயவர்த“தன நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இவ்வாறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தநிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இதற்கான பதிலை தனது டுவிட்டர் தளத்தில்  தெரிவித்துள்ளார்.

“ இந்திய பயிற்சியாளராக என்னை இணைக்கும் ஊகங்களால் நான் உற்சாகமடைந்தேன், ஆனால் இப்போதைக்கு முழுநேர பதவிகளை நான் பார்க்கவில்லை.“ “ நான் தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா ரைடஸுடன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறேன் என  பதிலளித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மஹே­ல ஜயவர்தனவால் தற்­போ­தைக்கு முடி­யாது என்றும், தேசிய அணி­யொன்றுக்கு பயிற்­சி­யா­ள­ரா­வ­தற்கு அவ­ருக்கு வயது போதாது என்றும் அதேபோல் அவ­ருடன் விளை­ய­டிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளை­யாடி வரு­வதால் அவரை உட­ன­டி­யாக பயிற்சியாள­ராக்க முடி­யாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.