ஏ.ஆர். ரஹ்மான் - கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியின் 'ஜிங்குச்சா'

19 Apr, 2025 | 03:58 PM
image

கமல்ஹாசன் - சிலம்பரசன் இணைந்து நடித்திருக்கும் ' தக்ஸ் லைஃப்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜிங்குச்சா' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

முத்திரை படைத்த இந்திய இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக்ஸ் லைஃப்' எனும் திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல் ' ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' ஜிங்குச்சா..'  எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம்,  இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் , கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் , திரிஷா, அபிராமி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கு பற்றினர்.

வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பதினேழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் 'ஜிங்குச்சா' பாடலை பாடலாசிரியர் கமல்ஹாசன் எழுத, பின்னணி பாடகர் ஆதித்யா ஆர் கே மற்றும் பின்னணி பாடகிகள் வைஷாலி சமந்த் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். 

திருமண வைபவம் ஒன்றில் மண மக்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் நடனமாடுவது போலும் தங்களது மகிழ்ச்சியை பரவச் செய்து பகிர்ந்து கொள்வது போலும் காட்சிகளும், இசையும் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right