இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 713 பேர் உயிரிழப்பு

19 Apr, 2025 | 12:19 PM
image

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வீதி விபத்துகளில் 713 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 744 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 28ஆக குறைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் சித்திரை புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற 103 வீதி விபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 23ஆக  குறைவடைந்துள்ளன.

அத்துடன், பதிவான மொத்த வீதி விபத்துகளில், மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் விபத்துகளால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 781 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் 194 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய...

2025-11-07 18:55:31
news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24