தண்டவாளத்தில் உறங்கிய ரயில் கடவை மேற்பார்வையாளர் ரயில் மோதி உயிரிழப்பு!

19 Apr, 2025 | 01:05 PM
image

பெரகும்புர - அம்பேவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை 4:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பதுளை தியத்தலாவை பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குறித்த ரயில் கடவையின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில் சம்பவத்தன்று ரயில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றப்பட்டு அம்பெவெல ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாடுகளில் உள்ள 25 பாதாள உலகக்...

2026-08-19 11:28:16
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 11:30:10
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02