இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது

Published By: Priyatharshan

26 Jun, 2017 | 02:05 PM
image

இலங்கை அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மஹே­ல ஜயவர்தனவால் தற்­போ­தைக்கு முடி­யாது என்றும், தேசிய அணி­யொன்றுக்கு பயிற்­சி­யா­ள­ரா­வ­தற்கு அவ­ருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் அவ­ருடன் விளை­ய­டிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளை­யாடி வரு­வதால் அவரை உட­ன­டி­யாக பயிற்சியாள­ராக்க முடி­யாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்­சி­யா­ள­ராக இருந்த தென்­னா­பி­ரிக்­காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்­பி­லி­ருந்து நேற்­று­முன்­தினம் வில­கினார். 56 வய­தான கிரஹம் போர்ட் ஏற்­க­னவே 2012-ஆம் ஆண்டு முதல் 2014ஆ-ம் ஆண்டு வரை இலங்கை அணியின் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்­டுள்ளார். 

பிறகு கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 2ஆ-வது முறை­யாக இலங்கை அணியின் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். 

2019ஆ-ம் ஆண்டு உலகக் கிண் ணம் வரை அவர் பயிற்­சி­யா­ள­ராக தொடர்வார் என்று அப்­போது தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அவ­ரது பயிற்­சியின் கீழ் இலங்கை அணி பெரிய அளவில் சாதிக்­க­வில்லை. 

முதல் முறை­யாக பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் கிரிக்­கெட்டில் தோல்­வியை தழு­வி­யது. அண்­மையில் சம்­பியன்ஸ் கிண்­ணத்தில் முதல் சுற்­றுடன் வெளி­யே­றி­யது. 

இதனால் அதி­ருப்­திக்­குள்­ளான இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் அவ­ரிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும், பரஸ்­பரம் அடிப்­ப­டையில் பத­வியை அவர் ராஜி­னாமா செய்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அடுத்த பயிற்­சி­யாள­ராக மஹேல ஜய­வர்­தன நிய­மிக்­கப்­ப­டலாம் என்று தெரி­விக்­கப்­பட்டு வந்­தது. இந்­நி­லை­யி­லேயே அவ­ருக்கு வயது குறைவு. அதனால் இப்­போ­தைக்கு இலங்கை அணியின் பயிற்­சி­யா­ள­ராக அவரை நிய­மிக்க முடி­யாது என்று திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை இரண்டு பேருடன் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தா­கவும் வெகு விரையில் இலங்கை அணிக்கு புதிய பயிற்­சி­யாளர் நிய­மிக்­கப்­ப­டுவார் என்றும் திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள சிம்­பாப்வே அணிக்­கெ­தி­ரான தொடருக்கு, தற்போதைய களத்தடுப்பு பயிற்சியாளரான நிக் போத்தஸ், இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35