கடவத்தையில் அமைந்துள்ள ஆடையகத்திற்கு வேனொன்றில் எடுத்துச்செல்லப்பட்ட 78 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துணிகர கொள்ளைச் சம்பவம் ராகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வேனொன்றில் கொண்டு செல்லப்பட்ட குறித்த பணத்தை கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு விட்டு கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.