18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு அதிசிறந்த பெறுபேறுகள் ; ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள்

Published By: Vishnu

19 Apr, 2025 | 01:18 PM
image

(நெவில் அன்தனி)

சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் பெரிய வெள்ளிக்கிழமை (18) இரவு நிறைவுக்கு வந்த 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது.

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் 10 வருட வரலாற்றில் வரலாற்றில் இலங்கையின் அதிசிறந்த பேறுபெறு இதுவாகும்.

போட்டியின் கடைசி நாளான பெரிய வெள்ளிக்கிழமையன்று தருஷி அபிஷேகா பேமசிறி 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2:14.86) வென்றெடுத்த தங்கப் பதக்கத்துடன் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

பெண்களுக்கான கலவை தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

கலவை தொடர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 14.25 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ, சன்சலா ஹிமாஷனி செனவிரத்ன, தருஷி அபிஷேகா, டில்கி நெஹாரா ஆகியோர் இடம்பெற்றனர்.

அப் போட்டியில் சீனா (2:11.11) தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து (2:15.00) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இதனைவிட இலங்கைக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பவன் நெத்ய சம்ப்பத் (2.03 மீற்றர்), பெண்களுக்கான முப்பாய்ச்சலில் டில்கி நெஹாரா (12.35 மீற்றர்), ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஷவிந்து அவிஷ்க (1:53.41 நி.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

முதலாம் நாளன்று ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் (15.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டாம் நாளன்று பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ (11.92 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த (3:59.47) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை மகளிர் ஏ அணியில் மன்னார்...

2026-05-11 21:36:11
news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29