பங்களாதேஷுக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள் தொடர்: 19இன் கீழ் இலங்கை குழாத்தில் யாழ். வீரர்கள் மாதுளன், ஆகாஷ்

Published By: Vishnu

18 Apr, 2025 | 10:26 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறவுள்ள இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன் விளையாடியிருந்தார். லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மாதுளன் 4 போட்டிகளில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.

இதேவேளை, பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் சுழல்பந்துவீச்சாளர்  விக்னேஸ்வரன்  ஆகாஷ் இடம்பெற்றிருந்தார்.

பாடாசலைகள் கிரிக்கெட் போட்டிகளில்   திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் ஆகாஷுக்கு 19 வயதுக்குட்பட்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

15 வீரர்களைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார நியமிக்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்

விமத் தின்சார (தலைவர் - றோயல்), துல்னித் சிகேரா (மஹாநான), திமன்த மஹாவித்தான (திரித்துவம்), விரான் சமுதித்த (புனித சர்வேஷஸ்), கவிஜ கமகே (கிங்ஸ்வூட்), கித்ம விதானபத்திரன (ஆனந்த), ரமிரு பெரேரா (றோயல்), தினுர தம்சித் (குருகுல), சாமிக்க ஹீனட்டிகல (மஹாநாம), ரசித் நிம்சார (வத்தளை லைசியம்), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விக்னேஸ்வரன் ஆகாஷ் (பருத்தித்துறை ஹாட்லி), தருஷ நவோத்ய (கொழும்பு ஸாஹிரா), சஞ்சு நிந்துவர (புனித ஆனாள்)

இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரில் ஆறு போட்டிகள்

இலங்கை இளையோர் அணிக்கும் பங்களாதேஷ் இளையோர் அணிக்கும் இடையிலான முதல் இரண்டு இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சிசிசி மைதானத்தில் ஏப்ரல் 26ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கோல்ட்ஸ் மைதானத்தில் 3ஆவது போட்டி ஏப்ரல் 30ஆம் திகதியும் சிசிசி மைதானத்தில் 4ஆவது போட்டி மே 3ஆம் திகதியும் எஸ்எஸ்சி மைதானத்தில் 5ஆவது போட்டி மே 5ஆம் திகதியம் கோல்ட்ஸ் மைதானத்தில் 6ஆவது போட்டி மே 8ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு...

2026-06-08 22:05:31
news-image

மே. தீவுகள் பயிற்சியக அணிக்கு எதிரான...

2026-06-08 20:26:35
news-image

அறிமுக வீரர் சுதார் அபார பந்துவீச்சு;...

2026-06-08 20:08:37
news-image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர்...

2026-06-08 15:12:04
news-image

லண்டன் வோட்டர்லூ பாலத்தில் மகளிர் ரி20...

2026-06-08 13:38:36
news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00