நபரை கத்தியால் குத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எரித்ததாக கூறி இருவர் பொலிஸில் சரண்! 

18 Apr, 2025 | 04:53 PM
image

நபரொருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) மாலை சரணமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கொட்டகலை பகுதியைச் சேர்ந்த நபர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் அடிப்படையில்  மேலும் தெரியவருவதாவது:

காயமடைந்த நபர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டார். எனினும், கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவை பேணி வந்துள்ளார்.  

இந்நிலையில், கணவரின் செயலை எதிர்த்த மனைவியை அந்த நபர் தாக்கியுள்ளார். 

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை விசாரிப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கான பெண், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் நேற்று திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவ்வேளை, விசாரணையின்போது பொலிஸார் முன்னிலையில், தனது மனைவியுடன் சமரசமாவதாக அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர், வெளியே சென்ற நபர், தான் தகாத உறவு கொண்டிருந்த பெண்ணுடன் சேர்ந்து கொட்டகலை பகுதியில் நின்று செல்பி எடுத்துள்ளார். 

அதைக் கண்ட மனைவியினது சகோதரன், அந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மாமனாரால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியுள்ளார்.

அதன் பின்னர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25