பிரபல பாடகரின் குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

18 Apr, 2025 | 04:42 PM
image

பொலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா, சில தினங்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் வழங்கியுள்ளார்.

அதாவது, ‘ஏ.ஆர்.ரஹ்மான் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் இசை அமைத்து வருகிறார். இதனால், பாரம்பரிய இசைக்கலைஞர்கள் பலர் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை வைத்து தனி ஆர்கெஸ்ட்ரா அமைத்து இசையை உருவாக்க வேண்டும்’ என்று அபிஜித் பட்டாச்சார்யா புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘அபிஜித்தை நான் பெரிதும் மதிக்கிறேன். இது அவரது தனிப்பட்ட கருத்து என்று நினைக்கிறேன். துபாயில் 60 இசைக்கலைஞர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். அதிலுள்ள அனைவருக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது. நான் இசை அமைத்த ‘பொன்னியின் செல்வன்’, ‘சாவ்வா’ ஆகிய படங்களில் 200 முதல் 300 இசைக்கலைஞர்கள் வரை பணியாற்றியுள்ளனர்.

சில நேரங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். அது பாடலின் தேவையை பொறுத்து அமையும். இதுபற்றி நான் எந்தவொரு போட்டோவும் வெளியிட்டதில்லை என்பதால், இதுபற்றி பலருக்கு தெரியவில்லை.

நான் எந்தளவுக்கு நேரடியாகவே இசைக்கலைஞர்களை பயன்படுத்துகிறேன் என்று, இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேட்டு பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மான் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு கருவியாக மட்டுமே பார்ப்பார். அதை இசைக்கலைஞர்களுக்கு மாற்றாக பயன்படுத்த மாட்டார் என்று அவரது இரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கமல்ஹாசன் – விஜய் சந்திப்பு :...

2026-05-16 18:36:29
news-image

கருப்பு - திரைப்பட விமர்சனம்

2026-05-16 17:48:03
news-image

சட்டென்று மாறுது வானிலை - திரைப்பட...

2026-05-16 19:55:02
news-image

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட...

2026-05-16 19:55:24
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட 'பாரீஸ்...

2026-05-16 19:56:41
news-image

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கும்...

2026-05-16 20:37:57
news-image

அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் அப்டேட்

2026-05-16 19:57:16
news-image

ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் ஆண்டனியின்...

2026-05-16 19:57:33
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'கட்டா குஸ்தி...

2026-05-16 19:57:49
news-image

ஜியோ ஹொட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்...

2026-05-16 19:58:20
news-image

எண்பதுகளின் கிராமத்து காதல் கதையை சொல்லும்...

2026-05-16 19:58:46
news-image

சிவாஜி கணேசனின் வசனத்துக்காகவே வரலாறு படைத்த...

2026-05-16 14:11:23