ஆடுகளத்தில் அபாயகரமான இடத்தில் கால்வைத்த அண்டர்சனுக்கு பந்து வீச தடை

By Priyatharshan

18 Jan, 2016 | 09:49 AM
image

இங்­கி­லாந்து அணியின் வேகப்பந்து வீச்­சா­ள­ரான ஜேம்ஸ் அண்­டர்சனுக்கு, ஜோகன்­னஸ்­பர்க்கில் தர்­ம­சங்­க­ட­மான தீர்ப்பை நடு­வ­ரிடம் இருந்து பெற வேண்­டி­ய­தா­யிற்று.

பொது­வாக வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் பந்து வீசிய பின்னர் இரண்டு அல்­லது மூன்று அடிகள் ஆடு­க­ளத்தில் வைப்­பார்கள். அப்­படி அவர்­க­ளது காலடி குறிப்­பிட்ட தூரத்­திற்கு அதி­க­மாக செல்­லக்­கூ­டாது. கிரிக்­கெட்டில் மூன்று ஸ்டம்­பிற்கு நேராக உள்ள அந்த இடம் அபா­ய­க­ர­மான இடம் (Danger Area) என்று அழைக்­கப்­படும்.

ஒரு பந்து வீச்­சா­ளர் அப்­படி அபா­ய­க­ர­மான இடத்தில் கால் வைத்தால் நடுவர் எச்­ச­ரிப்பார். பின்னர் பந்து வீச்­சா­ளர்கள் அதை சரி செய்து கொள்­வார்கள். ஜோகன்­னஸ்­பர்க்கில் நடை­பெற்ற 3ஆ-வது டெஸ்டில் ஜேம்ஸ் அண்­டர்சன் 61ஆ-வது ஓவரை வீசும்­போது அபா­ய­க­ர­மான இடத்தில் கால் வைத்தார். இதனால் நடுவர் அவரை எச்­ச­ரித்தார். அதன்பின் 94-ஆவது ஓவரில் மீண்டும் அதேபோல் சம்­பவம் நிகழ்ந்தது. அப்­போதும் நடுவர் அவரை எச்­ச­ரித்தார்.

அதன்பின் 100ஆ-வது ஓவரின் 2ஆ-வது பந்­தையும் வீசிய பின்னர் இதுபோல் சம்­பவம் நிகழ்ந்தது. இதனால் நடுவர் அவரை பந்துவீச அனு­ம­திக்­க­வில்லை. இதனால் அவ­ருக்­குப்­ப­தி­லாக பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை நிறைவு செய்ய வந்தார்.

முதல் இன்னிங்ஸில் தடை செய்யப்பட் டாலும் 2-ஆவது இன்னிங் ஸில் அண்டர்சன் பந்து வீச அனுமதிக்கப்பட் டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right