வெள்ளை மாளிகை (White House) என்பது, ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும்.
1901ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட், வெள்ளை மாளிகை என பெயர் சூட்டினார். மொத்தம் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில், 130க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் காலத்திற்கு முன்பு இது 'தி எக்ஸிகியூடிவ் விங் ' என்றே. அழைக்கப்பட்டது. 1812 முதல் 1814 வரை நடந்த அமெரிக்க பிரித்தானிய போரின் போது இம்மாளிகை எரியூட்டப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இக்கட்டிடம் நியோகிளாசிக்கல் கட்டடக்கலையைச் சேர்ந்தது.ஆர்கிடெக்ட் ஜேம்ஸ் ஹோபன் என்பவரால் வடிவமைத்து, மணல் பாறையால் (sand stone) கட்டப்பட்டது.
இப்பாறைகளின் நுண் துளைகள் பனிக்காலத்தில் உறைந்து விடாமல் இருக்க இதன் சுவர்கள் வெண் சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்பட்டன. 1818இல் சுண்ணாம்புக்கு பதிலாக காரீயம் கலக்கப்பட்ட வெண்மை நிறம் பூசப்பட்டது.
வெள்ளை மாளிகையானது, வாரத்திற்கு 30 ஆயிரம் பார்வையாளர்களை கையாளுகிறது. 65 ஆயிரம் கடிதங்கள், 3500 தொலைபேசி அழைப்புகள் மற்றும் 10000 மின் அஞ்சல்கள் இங்கு பெறப்படுகின்றன.
வெள்ளை மாளிகையின் தெற்கு வாயில் 1824இல் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து வடக்கு போர்டிகோ 1830இல் சேர்க்கப்பட்டது. இன்று வெள்ளை மாளிகை மொத்தம் 132 அறைகளைக் கொண்டுள்ளது.
மாளிகையின் வெளிப்புற மணற்கற்களைப் பாதுகாக்க சுண்ணாம்பு அடிப்படையிலான வர்ணம் பூசப்பட்டதால் இதற்கு வெள்ளை மாளிகை என்ற பெயர் வந்தது. பலமுறை இந்த மாளிகைக்கு வெள்ளை பூச்சு பூசப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் அடையாளமாக உள்ளது. அதில் நூற்றுக்கணக்கான அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் உழைப்பும் உள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வர்ணம் பூசுவது எளிதான வேலை இல்லை. ஒட்டுமொத்தமாக வெளிப்புறங்களில் இருந்து வரும் பேரழிவில் இருந்து காக்க, பழைய முறையில் அதற்கேற்ப வர்ணம் பூச வேண்டும்.
வெள்ளை மாளிகையில் வசிக்கும் ஜனாதிபதி, ஜனாதிபதி குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு பல சலுகைகள் உண்டு. ஆனால் வரி செலுத்துவோர், ஜனாதிபதியின் அனைத்து செலவுகளையும் ஏற்பதில்லை. வெள்ளை மாளிகையின் சமையலறை கலைஞர் சம்பளம், மளிகை பொருட்களுக்கான செலவு, கழிவறை பொருட்கள், பற்பசை, குப்பை அள்ளும் காகிதம் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் செலவை ஜனாதிபதியே ஏற்க வேண்டும்.
வெள்ளை மாளிகைக்குள் சில அமானுஷ்ய சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி உள்ளதாம். அதிக பேய் நடமாட்டமுள்ள அறை என ரோஸ் அறையை குறிப்பிடுகின்றனர்.
வெள்ளை மாளிகையில் கிழக்குப் பகுதியில் சலவை செய்து கொண்டிருந்த போது முதல் ஜனாதிபதியின் மனைவி அபிகெய்ல் ஆடம்ஸ் பேயை பார்த்துள்ளார. மற்றும் டேவிட் பர்ன்ஸ் குரலை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரந்து விரிந்த பசுமை புல்வெளி மற்றும் பழைமையான தோற்றம் கொண்ட வெள்ளை மாளிகை, திருமணத்திற்கு ஏற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. தற்போது வரை, வெள்ளை மாளிகை வளாகத்தில் 18 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்காவின் முகமாக விளங்கும் வெள்ளை மாளிகையை ஐரிஷ் கட்டட கலை நிபுணரான ஜேம்ஸ் ஹோபன் வடிவமைத்தார். வெளிப்புறத்தில் வெள்ளை மாளிகையில் கட்டடத்தை பார்க்கும் போது அயர்லாந்தில் உள்ள டிவின் ஹவுஸ் எனப்படும் லீன்ஸ்டர் இல்லம் போன்று இருப்பதை உணர முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM