எந்த பூவை பாவிக்கக்கூடாது?

18 Apr, 2025 | 12:19 PM
image

தமிழில் ஒரு முதுமொழி உண்டு. ஒரு விடயத்தை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொன்னால் போதாது. அதனை எப்படி செய்யக்கூடாது என்ற விடயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைவரும் ஒரு விடயத்தை இப்படித்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இப்படி பின்பற்றக் கூடாது என்றும் உணர்ந்து கொள்வர்.

அந்த வகையில் தன வரவை சாத்தியப்படுத்துவதற்கான பூக்களைப் பற்றிய குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள். அதே தருணத்தில் 27 நட்சத்திரக்காரர்களும் தன வரவிற்காக எந்த பூவை பாவிக்க கூடாது? என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும் தங்களுக்கு தன வரவை ஏற்படுத்தும் நட்சத்திர தினத்தன்று அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்ட பூக்களை வைத்து வழிபட வேண்டும். ஆனால் சிலர் தங்களுடைய சௌகரியத்திற்காகவும், சோம்பேறித்தனத்திற்காகவும், குதர்க்கமாக பேசி, அங்கு அந்த தருணத்தில் என்ன பூ கிடைக்கிறதோ, அதனை வைத்து வழிபடுவர்.

இது தவறான அணுகுமுறை என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக 27 நட்சத்திரக்காரர்கள் குறிப்பிட்ட இந்த பூக்களை தன வரவிற்காக பாதிக்க கூடாது என்றும் குறிப்பிடுகிறார்கள். அந்த பூக்களின் பட்டியலை தற்போது காண்போம்.

அஸ்வினி - பன்னீர் ரோஜா

பரணி - வெள்ளை சங்குப்பூ

கிருத்திகை - விரிச்சி பூ

ரோஹிணி - சம்பங்கி

மிருகசீரிஷம் - சிவப்பு ரோஜா

திருவாதிரை - செண்பகப்பூ

புனர்பூசம் - நீலோற்பவம் நீல வண்ணத்திலான பூ

பூசம் -  வெள்ளை அரளி

ஆயில்யம் - நந்தியாவட்டை

மகம் - செம்பருத்தி

பூரம் - சாமந்தி பூ

உத்திரம் - முல்லை

ஹஸ்தம் -  செவ்வரளி

சித்திரை - பாரிஜாதம்

சுவாதி - ஜாதி மல்லி

விசாகம் -  வில்வ பூ

அனுஷம் -  மரிக்கொழுந்து

கேட்டை -  பன்னீர் ரோஜா

மூலம் - செவ்வரளி

பூராடம் - மல்லிகை பூ

உத்திராடம் -  தாமரை

திருவோணம் - கதம்பம் பூ

அவிட்டம் - வெள்ளை தாமரை

சதயம் -  மந்தாரை

பூரட்டாதி -  மஞ்சள் அரளி

உத்திரட்டாதி -  இருவாச்சி பூ

ரேவதி - சிவப்பு முல்லை

மேலே குறிப்பிடப்பட்ட பூக்களை தவிர்த்து உங்கள் நட்சத்திரத்திற்கான தன வரவை உண்டாக்கும் பூக்களை தேடி கண்டறிந்து இறைவனுக்கு சாற்றி குறிப்பாக மகாலட்சுமி தாயாருக்கு சாற்றி வழிபட்டால் தன வரவு அதிகரிக்கும். வாழ்க்கை இனிக்கும். 

தொகுப்பு: சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்கு வன்மை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!

2025-05-10 16:48:36
news-image

செவ்வாய் தோஷத்துக்கான ஓர் எளிய பரிகாரம்

2025-05-10 13:54:27
news-image

இஷ்ட தெய்வங்களின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-05-09 14:46:27
news-image

வருவாய் குறையாதிருக்க வழிபட வேண்டிய சூட்சம...

2025-05-08 15:06:09
news-image

செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான சூட்சம...

2025-05-07 17:36:51
news-image

தங்க நகை ஆபரணங்களை சேமிப்பதற்கான பிரத்யேக...

2025-05-06 15:57:43
news-image

தற்காத்துக் கொள்வதற்கான பிரத்தியேக வழிபாடு..!?

2025-05-05 17:23:56
news-image

பணக்கஷ்டத்தை போக்கும் வளர்பிறை அஷ்டமி தூபம்

2025-05-05 14:55:46
news-image

கவலைகளை குறைக்கும் கருப்பு வெள்ளை வண்ண...

2025-05-02 15:45:25
news-image

‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் தெரியுமா? 

2025-05-02 10:59:34
news-image

தடைகளை அகற்றும் வலிமையான வாழ்வியல் பரிகாரம்..!!?

2025-04-30 16:19:45
news-image

நினைத்ததை நடத்தித்தரும் அரசமர வழிபாடு..!?

2025-04-29 14:22:28