உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல் ஊழியர்கள் தாக்குதல் !

Published By: Vishnu

18 Apr, 2025 | 07:23 AM
image

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த ஒரு குழுவை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், குறித்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்தக் குழு 16ஆம் திகதி புதன்கிழமை இரவு உணவை முன்பதிவு செய்துவிட்டு, சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் உணவு தீர்ந்துவிட்டதாக ஹோட்டல் ஊழியர் தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள், "உணவு இல்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்க ஏன் 30 நிமிடங்கள் ஆனது?" என்று கேட்டார்கள்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே ஹோட்டல் ஊழியர்கள் அவர்களைத் தாக்கியதாகத் தெரிவித்து சி.சி.ரி.வி. காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

ஹோட்டலில் சுமார் 30 பேர் தங்களைத் தாக்கியதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் 28 வயது இளைஞனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு...

2026-06-07 13:24:34
news-image

சலே சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக...

2026-06-07 13:16:33
news-image

கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்:...

2026-06-07 13:06:09
news-image

யால பயிர்ச்செய்கைக்குப் போதிய நீர் இருப்பு:...

2026-06-07 13:03:16
news-image

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார்...

2026-06-07 12:55:49
news-image

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம்...

2026-06-07 12:43:47
news-image

13 இலட்சம் இலங்கை மக்களுக்கு உணவு...

2026-06-07 12:35:42
news-image

நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்...

2026-06-07 12:25:07
news-image

மஹர நகரில் மின்சார உபகரண விற்பனை...

2026-06-07 12:18:59
news-image

ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை...

2026-06-07 12:21:20
news-image

அரசாங்கத்தின் விருப்பத்தின் பிரகாரமே பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகம்...

2026-06-07 11:57:55
news-image

வாக்குகளுக்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தி...

2026-06-07 11:53:41