18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: கலவை தொடர் ஓட்டம்,  200 மீ. 800 மீ. இறுதிகளில் இலங்கை

Published By: Vishnu

18 Apr, 2025 | 01:18 AM
image

(நெவில் அன்தனி)

சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான கலவை தொடர்  ஓட்டம், பெண்களுக்கான 200 மீற்றர், ஆண்களுக்கான 800 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் பங்கேற்க இலங்கை தகுதி பெற்றுள்ளது.

அதேவேளை பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்திற்கான இறுதிப் போட்டியில் பங்குபற்ற இலங்கை வீராங்கனை தனஞ்சனா பெர்னாண்டோவும் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட அரை இறுதிப் போடடியில் பங்குபற்ற ஷவிந்து அவிஷ்க ஆகியோர் தகுதிபெற்றனர்.

ஆண்களுக்கான கலவை தொடர் ஓட்டத்துக்கான இரண்டாவது தகுதிகான் போட்டியில் பங்குப்றறிய இலங்கை அணியினர் அப் போட்டியை ஒரு நிமிடம், 54.68 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இலங்கை தொடர் ஓட்ட அணியில் சத்துஷ்க இமேஷ் சில்வா, இரேஷ் மதுவன்த போகொட, பசிந்து சந்தருவன் சில்வா, ஷானுக்க நெத்மல் கொஸ்தா ஆகியொர் இடம்பெற்றனர்.

இறுதிச் சுற்றுக்கு தெரிவான 8 அணிகளில் இலங்கை அணியே சிறந்த நேரப் பெறுதியைக் கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியினர் முழுப் பிரயாசையுடன் பங்குபற்றினால் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதேவேளை, பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தனஞ்சனா பெர்னாண்டோ, 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய தனஞ்சனா அப் போட்டியை 24.42 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்குபற்ற இலங்கையின் ஷவிந்து அவிஷ்க தகுதிபெற்றார். இரண்டாவது தகுதிகாண் போட்டியை ஒரு நிமிடம், 55.82 செக்கன்களில் நிறைவுசெய்த அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றவர்களில் அதிசிறந்த நேரப் பெறுதியுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதே போட்டிக்கான முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய இலங்கையின் ரெஹான் பெரேரா (2:03.44) ஏழாவது இடத்தைப் பெற்று வெளியேறினார்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை வீரர் சத்துஷ்க இமேஷ் சில்வா தகுதிபெற்றுள்ளார்.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இமேஷ் சில்வா அப் போட்டியை 21.76 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மீண்டும் இலங்கைக்கு துரதிர்ஷ்டம்

பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய சன்சலா ஹிமாஷனி செனவிரத்ன தடுக்கி விழுந்ததால் அவரது வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது. ஆனால் அவர் மீண்டெழுந்து போட்டியை 1 நிமிடம் 08.69 செக்கன்களில் கடைசியாக நிறைவுசெய்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12
news-image

சுவிட்ஸர்லாந்தும் கொலம்பியாவும்  கடைசி 16 அணிகள்...

2026-07-08 04:29:56