(நெவில் அன்தனி)
மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.
மும்பை இண்டியன்ஸின் வெற்றியில் வில் ஜெக்கின் சகலதுறை ஆட்டம் பிரதான பங்காற்றியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சொந்த மைதான அனுகூலத்தைப் பயன்படுத்தி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ரெயான் ரிக்ல்டன், ரோஹித் ஷர்மா (26) ஆகிய இருவரும் 23 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரோஹித் ஷர்மா முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ரெயான் ரிக்ல்டன் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் வில் ஜெக்ஸ், சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
ஆனால், இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
சூரியகுமார் யாதவ் 26 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
எனினும் திலக் வர்மா, அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (21)ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணியின் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தினர்.
ஹார்திக் பாண்டியாவை ஆட்டம் இழக்கச் செய்த ஏஷான் மாலிங்க, அடுத்து களம் புகுந்த நாமன் திர்ரின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
எனினும் 19ஆவது ஓவரில் திலக் வர்மா பவுண்டறி அடித்து வெற்றி இலக்கை மும்பை இண்டியன்ஸுக்கு கடக்க உதவியதுடன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் அதிரடியாக 45 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், ஏனைய வீரர்களில் ஒருவர் மாத்திரமே சற்று திறமையை வெளிப்படுத்தினார்.
அபிஷேக் ஷர்மா 40 ஓட்டங்களையும் ட்ரவிஸ் ஹெட் 28 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ஹென்றி க்ளாசன் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM