டிஜிட்டல் தண்டப்பணச்செலுத்தல் முறைமையால் தபால் திணைக்களத்துக்குப் பாரிய நட்டம் - தபால் தொழிற்சங்கங்கள் முன்னணி கரிசனை

Published By: Vishnu

17 Apr, 2025 | 08:13 PM
image

வீதிப்போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணத்தை டிஜிட்டல் தளத்தின் ஊடாக செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தபால் திணைக்களம் வருடாந்தம் 600 - 800 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தபால் தொழிற்சங்கங்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 

இப்புதிய டிஜிட்டல் தள முறைமையானது நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் தண்டப்பண வருமானத்தை முழுமையாக இல்லாமல் செய்திருப்பதாகவும் அத்தொழிற்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி தண்டப்பண அறவீட்டை நவீனமயப்படுத்தும் நோக்கில் தபால் திணைக்களத்தினால் குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கும் செயன்முறையொன்று ஏற்கனவே வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், இருப்பினும் பொலிஸாரின் ஒத்துழைப்பின்மையினால் அது உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தபால் தொழிற்சங்கங்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

 இந்நிலையில் தபால் திணைக்களம் தற்போது முகங்கொடுத்துவரும் நட்டம் திறைசேரியைப் பாதிக்கக்கூடும் என்பதால், டிஜிட்டல் தளத்தின் ஊடாக தண்டப்பணம் செலுத்தும் செயன்முறையை மீள்பரிசீலனை செய்யுமாறும், திணைக்களத்தின் குறுஞ்செய்தி தகவல் வழங்கல் செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59