ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காலம் வெள்ளிக்கிழமை (18) மாலை 3.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையிலும் சனிக்கிழமை (19) இலிருந்து ஞாயிற்றுக்கிழமை (27) பகல் 12.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த யாத்திரிகைக்காக உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி வளாகப் பாதுகாப்பு, வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக இலங்கை பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
அதன்படி, பொதுமக்களை சோதனையிடுதல், பொதுப் போக்குவரத்து கட்டுப்பாடு, வீதிப் பாதுகாப்பு கடமை, பொலிஸ் உயர் பதவிநிலை உத்தியோகத்தர்கள் 30 பேரின் கண்காணிப்பின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10,000 இற்கும் அதிகமானோரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யாத்திரைக்காக வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க வியாழக்கிழமை (17) இலிருந்து வாகனங்களை நகரத்துக்குள் செலுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஸ்ரீ தலதா யாத்திரைக்காக வாகனங்களில் வரும் பக்தர்கள் பின்வரும் இடங்களில் நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பக்தர்களின் வசதிகளுக்காக வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து பொது போக்குவரத்துச் சேவையினூடாக சலுகையுடன் கூடிய பணம் அறவிடப்பட்டு தலதா மாளிகை வரை போக்குவரத்துச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கம்பளை மற்றும் கொழும்பிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை கெட்டம்பே சந்தியில் நிறுத்திவைத்து அவ் வாகனங்களை கெட்டம்பே விளையாட்டு மைதானம் மற்றும் கன்னொருவ வீதியில் நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- குருநாகல் கட்டுகஸ்தோட்டை வீதியினூடாக வரும் வாகனங்கள் 04ஆவது கட்டை அருகில் நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க மாவத்தை - பேருந்து
தலதா யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில் பின்வரும் இடங்களில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளது.
- வில்லியம் கோப்பல்லாவ மாவத்தை ஹீரஸ்ஸகல சந்தி.
- சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை கெட்டம்பே விளையாட்டு மைதானம் வாயில் அருகாமையில்
- மஹயியாவ் வேவெல்பிட்டிய விளையாட்டு மைதானம் அருகில்
- வேவெல்ல பாலம்
- தென்னகும்புர வீதித் தடை
- கட்டுகஸ்தோட்டை பாலத்தின் அருகில்
- கடுகன்னாவை வீதித் தடை
- தொடம்பல பாலத்தின் அருகாமையில்
- ஹந்தானை வீதி IFS நிறுவனத்தின் அருகில்
- பொல்கொல்ல வேல்ல அருகில்
- போத்தலாபிட்டிய வீதித் தடை
- பலகடுவ வீதித் தடை
- திகன சந்தி
யாத்திரைக்காக வரும் பக்தர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து வருமாறும் அதிகமான பயணப் பொதிகள், கெமராக்கள், மின் உபகரணங்கள் போன்றவற்றை தலதா மாளிகையினுள் எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடமையில் ஈடுபடும் பொலிஸாரின் உதவிக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவு, இலங்கை முப்படையினர், கடற்படை மற்றும் விமானப்படையினர் ஆகியோரும் கடமையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM