Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக்கொண்ட Urology சிகிச்சைப்பிரிவை ஆரம்பித்து தனது விசேடத்துவ பராமரிப்பை விஸ்தரித்துள்ளது

17 Apr, 2025 | 12:16 PM
image

சுமார் 80 வருடங்களுக்கு மேலாக விசேடத்துவமான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நம்பிக்கையை வென்ற முன்னோடியாகத் திகழும் Durdans Hospital, நவீன வசதிகள் படைத்த Urology சிகிச்சைப்பிரிவை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட நோய் இனங்காணல் வசதிகள், குறைந்தளவு துளையிடலுடனான சத்திரசிகிச்சைகள் மற்றும் பரந்த சத்திரசிகிச்சையின் பின்னரான பராமரிப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.

புதிய Urology சிகிச்சைப் பிரிவினூடாக, ஒரு பகுதியிலிருந்து பரந்தளவு சிகிச்சைசார் சேவைகள் வழங்கப்படுவதால், நோயாளர்களுக்கு வினைத்திறனான மற்றும் உயர்தரம் வாய்ந்த பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்தப்பிரிவு ஐந்து வைத்திய ஆலோசனை அறைகளை கொண்டுள்ளதுடன், சிகிச்சைகளை சீராக மேற்கொள்ளக்கூடிய வகையில் சகல வசதிகளையும் கொண்ட சிகிச்சை நிலையத்தையும் கொண்டுள்ளது.

சிறுநீரகபாதையுடன் தொடர்புடைய குறைபாடுகள் இனங்காணல் மற்றும் சிகிச்சைகளுக்காக குறைந்ததுளையிடலுடனான சத்திரசிகிச்சை முறையான cystoscopy அடங்கலாக பரந்தளவு விசேடத்துவ சிகிச்சைகளை இந்த நிலையம் கொண்டுள்ளது.

மேலும், இந்த நிலையத்தினால், நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ்பாதுகாப்பான முறையில் stents அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுநீர்நீக்கக்குழாய் (catheter) வைப்பை சௌகரியமான முறையிலும், துல்லியமான முறையிலும் பின்பற்றப்படும் மேம்படுத்தப்பட்ட catheterisation நுட்பங்களையும் கொண்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர்கள் மற்றும் நவீனதொழினுட்பம் ஆகியவற்றை அணுகும் வசதியை கொண்ட இந்தநிலையம், பரந்தளவு சிறுநீரக குறைபாடுகளுக்கு நுணுக்கமான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பான் ஏசியா வங்கி - இலங்கையின்...

2025-05-15 12:16:21
news-image

LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில்...

2025-05-15 12:15:16
news-image

‘சஹசக் நிமாவும்’ இன் உத்தியோகபூர்வ வங்கி...

2025-05-15 10:44:47
news-image

விவசாய சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிய கார்கில்ஸ்...

2025-05-14 12:38:06
news-image

செலிங்கோ லைஃப் பணிப்பாளர் சபைக்கு சமித...

2025-05-14 11:12:01
news-image

இந்திய-ஆசிய எக்ஸ்பிரஸ் கடலடித் தொலைதொடர்பு கேபிள்...

2025-05-14 11:09:56
news-image

SLT-MOBITEL ரோமிங் வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்...

2025-05-13 12:27:11
news-image

தலைமை அலுவலகத்தில் புதிய பெருநிறுவனக் கிளையை...

2025-05-13 13:20:43
news-image

பான் ஏசியா வங்கிக்கு CPM விருதுகள்...

2025-05-08 13:49:59
news-image

தேவி ஜுவ்வலர்ஸ் சீனிவாசகம் – தங்கத்தை...

2025-05-08 11:38:55
news-image

மக்கள் வங்கி தனது 2024ம் ஆண்டுக்கான...

2025-05-08 00:20:23
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல்...

2025-05-07 10:58:20