துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

17 Apr, 2025 | 11:24 AM
image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று  சந்தேகநபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடையக்குறிச்சி பகுதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இடையக்குறிச்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவராவார்.

அத்தோடு, கொபேகனே பொலிஸ் பிரிவின் அரலுகஸ்வெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயயதுடையவராவார்.

இதேவேளை, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கம பகுதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது, 01 வெளிநாட்டுத் துப்பாக்கி, 06 தோட்டாக்கள், ஒரு பை வெடிமருந்து , 10 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்,05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 11,100 ரூபா பணத்தொகை என்பன பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ரத்கம பகுதியைச் சேர்ந்தவராவார்.

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19