தன வரவை சாத்தியப்படுத்தும் பூக்கள்..!!

Published By: Vishnu

17 Apr, 2025 | 03:54 AM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் நேற்றைய தவறுகளை சீரமைத்து கொள்ள தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் ?என்பதையும், எதிர்காலத்தில் எதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்? என்பதை பற்றியும் அவர்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதனால்தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நல்ல விடயங்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் எம்மில் அனைவரும் நாளாந்தம் எதிர்பார்க்கும் தன வரவு குறித்த சூட்சம குறிப்புகளை எம்முடைய முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள். அதில் பூக்களுக்கும் முதன்மையான பங்களிப்பு உண்டு. அதாவது 27 நட்சத்திரக்காரர்களுக்கு இறை வழிபாட்டின் போது எந்த பூக்களை பயன்படுத்தினால்.. அதன் மூலமாக தன வரவு கிடைக்கும் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்கள் இறை வழிபாட்டின் போது பாவிக்க வேண்டிய பூக்களின் பட்டியலை கீழே காண்போம்.

நட்சத்திரம்- பூக்கள்

அஸ்வினி - முல்லைப்பூ

பரணி - செவ்வரளி

கிருத்திகை - பாரிஜாதம்

ரோஹிணி - ஜாதி மல்லி

மிருகசீரிஷம் - வில்வ பூ

திருவாதிரை - மரிக்கொழுந்து

புனர்பூசம் -  பன்னீர் ரோஜா

பூசம் - செவ்வரளி

ஆயில்யம் - மல்லிகை

மகம் - தாமரை

பூரம் - கதம்பம்

உத்திரம் - வெள்ளை தாமரை

ஹஸ்தம் - மந்தாரை

சித்திரை - பொன்னரளி (மஞ்சள் வண்ண அரளி)

சுவாதி - இருவாச்சி பூ

விசாகம் - சிவப்பு முல்லை

அனுஷம் - பன்னீர் ரோஜா

கேட்டை - வெள்ளை சங்குப்பூ

மூலம் - விரிச்சி பூ

பூராடம் - சம்பங்கி பூ

உத்திராடம் - சிவப்பு ரோஜா

திருவோணம் - செண்பகப்பூ

அவிட்டம் - நீலோற்பவம் ( ஊதா வண்ண பூ)

சதயம் -  வெள்ளை அரளி

பூரட்டாதி - நந்தியாவட்டை

உத்திரட்டாதி - செம்பருத்தி

ரேவதி - சாமந்தி பூ

27 நட்சத்திரக்காரர்களும் தங்களுக்கு தன வரவை அள்ளித்தரும் நட்சத்திர தினத்தன்று அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பூக்களை வாங்கி இறைவனை வணங்க வேண்டும். குறிப்பாக மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். இதனால் தனவரவு அதிகரிக்கும் என்பது உறுதி. வெள்ளிக்கிழமைகளில் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் மகாலட்சுமி தாயாரை பிரத்யேக பூக்கள் மூலம் வணங்கினாலும் தன வரவு உண்டு.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17
news-image

ஜுன் மாத ராசி பலன்கள் -...

2026-05-31 10:28:57
news-image

பண வரவு தடையின்றி அதிகரிக்க பாவிக்கவேண்டிய...

2026-05-30 15:04:08
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2026-05-29 18:11:53
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக வழிமுறை..!?

2026-05-29 11:54:34
news-image

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு...

2026-05-26 13:13:42
news-image

நன்மை பயக்கும் சங்கு வழிபாடு

2026-05-25 15:22:58