நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'உருட்டு உருட்டு' என பெயரிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகி வரும் ' உருட்டு உருட்டு' எனும் திரைப்படத்தில் கஜேஷ் நாகேஷ் , ரித்விகா ஸ்ரேயா ,மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், பத்ம ராஜு ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருணகிரி - கார்த்திக் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவை படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாய் காவியா- சாய் கைலாஷ் - பத்ம ராஜு ஜெய்சங்கர் - ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,'' தற்போது சிறிய ஊர்களில் கூட கருத்தரிப்பு மையங்களை காண முடிகிறது. இதன் பின்னணி என்ன? என்பதை நகைச்சுவையுடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை. '' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM