(நெவில் அன்தனி)
சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ இரண்டாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு 2ஆவது வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
புதன்கிழமை (16) இரவு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியை 11.92 செக்கன்களில் நிறைவுசெய்து இந்திய வீராங்கனை ஆர்த்தியை 0.01 செக்கன் வித்தியாசத்தில் பின்தள்ளி வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அப் போட்டியில் சீன வீராங்கனை ஸாங் கியான் (11.80 செக்) முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆர்த்தி (11.93 செக்) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 15.10 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி வீரர் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இலங்கைக்கு முதலாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றுகொடுத்திருந்தார்.
இதேவேளை, புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் சத்துஷ்க இமேஷ் சில்வா (10.84 செக்.) கடைசி இடத்தைப் பெற்றார்.
அப் போட்டியில் ஜப்பான் வீரர் ஷிமிஸு சொராட்டோ (10.38 செக்.) தங்கப் பதக்கத்தையும் சீன வீரர் டாய் ஹொங்யூ (10.39 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் ஹொங் கொங் சைனா வீரர் கூ செயுக் பங் ஜஸ்பர் (10.40 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டிக்கு சவிந்து நிமேஷும் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டிக்கு சன்சலா ஹிமாஷனியும் தகுதிபெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM