(ஆர்.யசி)

எதிர்வரும் நாட்களில் பல தரப்பட்ட வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சாதாரண மக்களுக்கு ஏற்ற வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமை அரசாங்கத்திடம் உள்ளது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் தேரர்களிடம் அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.