கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா?

16 Apr, 2025 | 05:23 PM
image

ஆமணக்கு எண்ணெயானது, இமைகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள இயற்கை வைத்தியமாகும். இதில் உள்ள ‘ரிசினோலிக்’ அமிலம், கண் இமை முடிகளை வலுப்படுத்தி, வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், ஆமணக்கு எண்ணெயில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் ‘ஈ’, முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

தேங்காய் எண்ணெய், முடியின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சிறந்தது. இதிலுள்ள லொரிக் அமிலம், கண் இமை முடிகளின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, அடர்த்தியாக வளர உதவுகிறது. அதனால், தேங்காய் எண்ணெய் கண் இமைகளுக்கு ஈரப்பதமூட்டி, உடைவதைத் தடுக்கிறது.

கிரீன் டீயில் என்டி ஒக்ஸிடன்ட்கள் மற்றும் பொலிபினால்கள் நிறைந்துள்ளன. இவை கண் இமை முடிகளின் வளர்ச்சியைத் தூண்டும்.

கற்றாழை ஜெல் சருமத்திற்கும், முடிக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதில் உள்ள என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், கண் இமை முடிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, வலுப்படுத்துகின்றன. 

விட்டமின் ‘ஈ’ ஒரு சிறந்த என்டி ஒக்ஸிடன்ட் ஆகும். இது கண் இமை முடிகளை வலுப்படுத்தி, உடைவதைத் தடுக்கிறது. மேலும், விட்டமின் ‘ ஈ’ எண்ணெய் கண் இமைகளுக்கு ஈரப்பதமூட்டி, ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, கண் இமை முடிகளை வலுப்படுத்தி, அடர்த்தியாக வளர உதவுகிறது. 

விளக்கெண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய்யை இரவு தூங்கும் முன் கண் இமைகளில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை தோலை விளக்கெண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய்யில் ஒரு வாரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தடவி வந்தால் முடி வளரும்.

இரவு படுக்கைக்கு செல்ல முன் பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் இமைகள் அடர்த்தியாகும். 

குளுர்ச்சியாக இருக்கும் கிரீன் டீயில், பஞ்சு தொட்டு கண் இமைகளில் தடவி வர இமை, அடர்த்தியாகும்.

விட்டமின், நியூட்ரியன்ஸ் நிறைந்த உணவுப் பழக்கமும், இமைகளின் முடி அடர்த்திக்கு உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00