கிளிநொச்சி பாடசாலை துஷ்பிரயோக சம்பவம் : கைது செய்யப்பட்ட அலன்டீலனை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துகிறோம் - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு

16 Apr, 2025 | 05:17 PM
image

(நா.தனுஜா)

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தியோ அலன்டீலன் தமது கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை உறுப்பினர் எனவும், குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துவதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் சந்தியோ அலன்டீலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர் எனவும், மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடை நிறுத்துவதாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரியப்படுத்தி பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் சாந்தியோ அலன்டீலனுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

'கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விடயத்தில் நீங்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் மோசமானதாகும். ஆகையினால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை கட்சி உறுப்புரிமையிலிருந்து தாங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படுகிறீர்கள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37