(நெவில் அன்தனி)
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணப் போட்டியில் இலங்கை ஆடவர் அணியும் மகளிர் அணியும் பங்கேற்கவுள்ளது.
இந்தியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆடவருக்கான ஆசிய கிண்ண ஹொக்கி போட்டிக்கு தகுதிகாணும் போட்டியாக
ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ண ஆடவர் போட்டி அமைகிறது.
ஆடவர் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள், ஆடவர் ஆசிய கிண்ண ஹொக்கி போட்டியில் சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் இணையும்.
ஆடவருக்கான ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணப் போட்டிகள் ஏப்ரல் 17 முதல் 27 வரையும் மகளிருக்கான போட்டிகள் ஏப்ரல் 18 முதல் 27 வரையும் நடைபெறும்.
ஆண்கள் பிரிவில் 10 நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றுகின்றன.
பங்களாதேஷ், இந்தோனேசியா, தாய்லாந்து, கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளுடன் பி குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது.
ஏ குழுவில் ஓமான், சைனீஸ் தாய்ப்பே, ஹொங்கொங், உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
மகளிர் பிரிவில் சிங்கப்பூர், ஹொங்கொங் சைனா, சைனீஸ் தாய்ப்பே, உஸ்பெகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகள் ஒரே குழுவில் போட்டியிடவுள்ளன.
இலங்கை அணிகள்
ஆடவர் அணி: தரிந்து குமார ஹீந்தெனிய (தலைவர்), தம்மிக்க ப்ரபாத் ரணசிங்க (உதவித் தலைவர்), ரந்திக்க கிறிஸ்மல் பெர்னாண்டோ, நிலன்த டேமியன் டி சில்வா, மதுஷான் சமீர, சுரேன் ஹிருஷ விமுக்தி, ரவிது செரான் நிமன்க, குசல் ஹேஷான் திலக்கசிறி தரங்க இரோஷ குணவர்தன, ஸ்ரீமத் ரமல் பாத்திய டி அல்விஸ், கிஹான் சங்கீத் அமரசிங்க, அஷான் துஷ்மன்த பண்டார, ப்ரமுத்ய உதயஷன், சந்தருவன் ப்ரியலன்கா, ரஜித்த டிலான் குலதுங்க, அநுராத சுரேஷ், சந்தன சத்துரங்க சந்த்ரசேன, லக்ஷான் சந்தருவன்.
தேசிய பயிற்றநுர்: குலத்திசி சாமிக்க, தலைமைப் பயிற்றுநர்: மொஹமத் ரிபாஸ், உதவிப் பயிற்றுநர்: ஷேன் ஷெரொன் ரத்னம்.
மகளிர் அணி: கீதிகா சமன்தி, மயுராணி சந்த்ரா, ஷார்மினி செலோமி ஜோன்ஸ், சமாதரா சந்த்ரிகா குமாரி, ப்ரதீப்பா நில்மினி, கீத்திகா தமயன்தி, இஷாரா மதுவன்தி ரத்நாயக்க, நெத்மி சசங்கா, டில்ஹானி ரொஷானி ராஜபக்ஷ, பாக்யா மல்ஷானி, தருஷ்யாமேன், தக்ஷிக்கா மதுவன்தி, நிப்புனி இஷாரா, சஜீவனி நிரோஷிக்கா, டில் ரதினா மிஸ்கின், விமுக்தினி களுஆராச்சி, இமேஷா பியூமி வீரபாகு, ஷெஹானி பூர்ணிமா பெர்னாண்டோ.
தலைமைப் பயிற்றுநர்: மிலன் தேவப்ரிய போத்தேஜு. உதவிப் பயிற்றுநர்: தரிந்த மஹேஷ்.
இலங்கையின் போட்டிகள்
ஆடவர் பிரிவு
ஏப்ரல் 17: இலங்கை எதிர் கஸக்ஸ்தான்
ஏப்ரல் 19: இலங்கை எதிர் தாய்லாந்து
ஏப்;ரல் 21: இலங்கை எதிர் இந்தோனேசியா
ஏப்ரல் 23: இலங்கை எதிர் பங்களாதேஷ்
மகளிர் பிரிவு
ஏப்ரல் 18: இலங்கை எதிர் ஹொங்கொங் சைனா
ஏப்ரல் 19: இலங்கை எதிர் சிங்கப்பூர்
ஏப்ரல் 21: இலங்கை எதிர் உஸ்பெகிஸ்தான்
ஏப்ரல் 23: இலங்கை எதிர் சைனீஸ் தாய்ப்பே
ஏப்ரல் 24: இலங்கை எதிர் இந்தோனேசியா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM