விட்டமின் ‘சி’, பொட்டாசியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ள சீரகத்தை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதாலும், நீராகாரமாக எடுத்துக்கொண்டாலும் நம் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை, வெறும் 10 நாட்களிலிலேயே உணரலாம்.
உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைக் கொடுப்பதில் சீரகத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதனால், வெயில் காலங்களில், குளிரூட்டப்பட்ட தண்ணீரை அல்லது மண்பானைத் தண்ணீரை பருகி, தாகத்தை போக்கிக்கொள்கிறோம். இதற்கு பதில், வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை பருகி, கோடைக் காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை கொண்டுவர முடியும்.
ஆனால், சீரகம் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்ளவும் கூடாது. தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அதிகமாக எடுத்துக்கொள்வது, உடலில் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிவிடும்.
ஒரு லீற்றர் தண்ணீருக்கு ஒரு கிராம் அளவிற்கு மட்டும் சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின்பு பருகவும். இப்படி கொதிக்கவைத்த நீரை, 12 மணி நேரம் வரை வைத்து பருகலாம்.
மேலும், வழக்கமாக, கொதிக்க வைத்த நீரை பருகும்போது நீரில் இருக்கும் தாதுப்புகள் ஆவியாகிவிடும் என்பதால் அது சுவை இல்லாமல் இருக்கும். ஆனால் சீரக தண்ணீரை கொதிக்க வைக்கும்போது சீரகத்தில் உள்ள சத்துகள் நீருடன் சேர்வதால், அது குடிப்பதற்கு சுவையாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
பலன்கள்
· கோடைக் காலத்தில் அதிகமாக வியர்க்கும்போது அதிகளவில் பொட்டாசியம் வெளியேறும். சீரக தண்ணீரை பருகுவதன் மூலம் அதனை ஈடுசெய்யலாம்.
· செரிமான பிரச்சினையை சரிசெய்யும்.
· உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
· குடல் பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
· ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
· உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்கவேண்டும், நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் தண்ணீருக்கு பதில் சீரக நீர் அருந்தினாலே போதும்.
· சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் பற்றி பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்தோ, அல்லது வெந்நீரில் போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால் 10 நாட்களில் மிகப் பெரிய வித்தியாசத்தைக் காணமுடியும்.
· சீரகத்தில் மிகக் குறைவான கலோரியே உள்ளது. மற்ற எந்த ஒரு பானத்தைக் காட்டிலும் சீரக நீர் கலோரி குறைந்ததாகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் விளங்குகிறது.
சீரக நீர் செய்முறை
சீரகத்தை எண்ணெய் விடாமல் வெறுமனே வறுத்துப் பொரித்துக்கொள்ளுங்கள்.
பின்னர், அதே சூடான பாத்திரத்தில், 2 தேக்கரண்டி தேனை விடவும். அப்போது சீரகம் பொங்கும்.
அந்தநேரத்தில், 200 மிலி தண்ணீரை ஊற்றி மீண்டும் அடுப்பை பற்றவைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி வடித்துக்கொள்ளவும்.
இளம்சூட்டில், 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து குடிக்கவும். இதன் மூலம் பேதி நிற்கும். தேவைப்பட்டால் 2 அல்லது 3 முறை குடிக்க, சூட்டினால் வரும் பேதி நிற்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM