கம்பஹா துப்பாக்கிச் சூடு ; கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்குவதாக நோக்கம்?

16 Apr, 2025 | 03:14 PM
image

கம்பஹா நகரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கம்பஹா நகரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில்  நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது, லொறியில் பயணித்த இருவரும் லொறியிலிருந்து கீழே இறங்கி அருகிலிருந்த கடைக்குள் ஓடிச் சென்றததால் அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய “அவிஷ்க மல்லி” என்பவரின் சித்தியின் மகனை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

“கணேமுல்ல சஞ்சீவவின்” கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும், “அவிஷ்க மல்லி” என்பவரின் சித்தியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் எந்த குற்றச்சாட்டுகளும் பதிவாகியில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-30 06:10:53
news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00