இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது.பாலஸ்தீனிய மக்களிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலேயே மாலைதீவு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்துள்ளது.
மாலைதீவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான தீர்மானத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கும் இந்த நடவடிக்கை பாலஸ்தீன மக்களிற்குஎதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் அட்டுழியங்கள் மற்றும்; இனப்படுகொலைகளிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் மாலைதீவு அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என ஜனாதிபதி முகமட் முய்சு தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்துவரும் இஸ்ரேல் மாலைதீவில் இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வு வருவதால் அந்த நாட்டிற்கு செல்வதை தனது பிரஜைகள் தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 இல் மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளில் 0.6 வீதத்தினரே இஸ்ரேலியர்கள்.214000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளில் 59 பேரே இஸ்ரேலியர்கள் என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அரசாங்கம் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சி ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM