மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; இருவர் பலி ; இருவர் படுகாயம்

16 Apr, 2025 | 10:35 AM
image

குருணாகல் - தம்புள்ளை ஏ6 வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் படுகாயமடைந்துள்ள நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்புறத்தில் பயணித்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொரட்டியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56