நாட்டில் கொழும்பு 07, வவுனியா, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான நிலையிலும், கொழும்பு 07, வவுனியா, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக்குறியீடு 34 தொடக்கம் 76 க்கும் இடையில் பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையிலும், கொழும்பு 07, வவுனியா, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமான நிலையில் இருக்கும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM