கம்பஹா நகர பேருந்து நிலையத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (15) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் முதல்கட்ட தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ஓடிக்கொண்டிருந்த சிறிய லொறியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது லொறியில் இருந்த இருவர் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலிருந்த கடைக்குள் ஓடியதால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட லொறி மட்டுமே சேதமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM