எம்மில் சிலர் பேசும் போது தொண்டைப் பகுதியில் அசௌகரியம் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக சிறிய அளவில் செருமுவர். இது லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் எனும் தொண்டை பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அறிகுறி என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். இதனை உடனடியாக கண்டறிந்து முழுமையான சிகிச்சையை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். மேற்கொள்ள தவறினால் இது நாட்பட்ட பாதிப்பாக மாற்றம் அடைந்து தொண்டை பகுதியில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறை உண்டாக்கி விடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
தொண்டை கரகரப்பு ,குரல்வளை அழற்சி, நாட்பட்ட தொண்டை அழற்சி.. போன்ற பல்வேறு அறிகுறிகளுக்கு சைலன்ட் ரிஃப்ளெக்ஸ் எனப்படும் லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் காரணமாக இருக்கக்கூடும். இரைப்பை உணவு குழாயில் ஏற்படும் பாதிப்பிற்கும், இத்தகைய பாதிப்பிற்கும் நுட்பமான வித்தியாசம் இருக்கிறது.
பொதுவாக இரைப்பையில் உள்ள அமிலங்கள் இரைப்பையின் மேல் பகுதி - உணவு குழாயின் அடிப்பகுதி- அங்கிருந்து மேல் பகுதி வரை பரவுவதற்கு இரைப்பை உணவு குழாய் நெஞ்செரிச்சல் என விவரிக்கிறோம். ஆனால் தொண்டையில் ஏற்படும் லாரிங்கோபார்ஜீனியல் ரிஃப்ளெக்ஸ் என்பது தொண்டை பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பாகும். மேலும் சிலருக்கு இரைப்பையின் மேற்பகுதிக்கு வரும் அமிலங்களால் பிரத்யேக நரம்புகள் தூண்டல் பெற்று, அவை தொண்டை பகுதியில் அதிர்வை ஏற்படுத்தி இத்தகைய பாதிப்பை உண்டாக்கலாம். இதனால் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்படும்.
சிலருக்கு அதீத தாகம் ,விழுங்குவதில் சிரமம், இருமல், தொண்டை கரகரப்பு. போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு வைத்தியர்கள் அப்பர் எண்டாஸ்கோபி- உணவுக்குழாய் பிஎச் பரிசோதனை - உணவுக் குழாய் மானோமேட்ரி பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதன் பிறகு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள். மேலும் வெகு சிலருக்கு மட்டுமே சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பர். இத்தகைய சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பை மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM