தொலைக்காட்சி கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டும் 13 ஆவது ரைகம் தொலைக்காட்சி நாடக விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது தலைமையில் நேற்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. 

தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் தொடர்பான அனைத்து துறைகளையும் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் நான்கு விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. 

சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகிய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.